HomeBlogதமிழகத்திற்கு வர E-Pass கட்டாயம் – ஆன்லைனில் E-Pass பெற எளிய முறை

தமிழகத்திற்கு வர E-Pass கட்டாயம் – ஆன்லைனில் E-Pass பெற எளிய முறை

 

தமிழகத்திற்கு வர
EPass கட்டாயம்
ஆன்லைனில் EPass
பெற
எளிய முறை

தமிழகத்தில் CORONA பரவலலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு
அறிவித்த இந்த கட்டுப்பாடுகள் 10-04-2021 முதல் அமலுக்கு
வரும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டுமாக பாஸ்
நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது
பிற மாநிலங்கள், வெளிநாடுகளிருந்து தமிழகம் வருவதற்கு
EPass கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தவிர
சுற்றுலா தலங்களுக்கு செல்ல
வேண்டும் என்றாலும் EPass
அவசியம். அதன்படி மாநில
அரசு அறிவித்தபடி பாஸை
எளிதான முறையில் பெற்றுக்
கொள்ளலாம்.

ஆன்லைனில் EPass பெற எளிய
முறை

  • EPass
    பெற
    முதலில் https://eregister.tnega.org/#/user/pass
    என்ற இணையதளத்துக்கு செல்ல
    வேண்டும்.
  • பிறகு உங்கள்
    தொலைபேசி எண்ணை பதிவு
    செய்ய வேண்டும்.
  • உங்கள் தொலைபேசி
    எண்ணுக்கு OTP எண்
    அனுப்பப்படும்.
  • அந்த OTP
    எண்ணை வைத்து உள்ளே
    நுழைய வேண்டும்.
  • அங்கே உங்கள்
    பயணம் குறித்த பல
    கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
  • அதில் தனியாக
    அல்லது குழுவாக செல்லுகிறீர்களா என்று கேட்கப்பட்டிருக்கும்.
  • பிறகு நீங்கள்
    பயணப்படும் வாகனம் பற்றி
    கேட்கப்பட்டிருக்கும்.
  • அதில் சரியானவற்றை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதில் நீங்கள்
    எந்த தெரிவை கிளிக்
    செய்கிறீர்களோ அதன்
    மற்றொரு பக்கம் திறக்கப்படும்.
  • அந்த பக்கத்தில் நீங்கள் எந்த வழியாக
    தமிழகத்திற்கு வருகிறீர்கள் என கேட்கப்பட்டிருக்கும்.
  • அதில் சாலை
    வழி என்பதை தேர்வு
    செய்தால் எதற்காக வருகிறீர்கள் என கேட்கப்படும்.
  • திருமணம், இறப்பு,
    சுற்றுலா என பல
    காரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில் தேவையானவற்றை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு விண்ணப்பதாரர், அவருடன் எத்தனை பேர்
    பயணப்படுகிறீர்கள் என்ற
    விவரம் கேட்கப்படும்.
  • அதில் பயணம்
    மேற்கொள்ள விரும்புபவர்களின் பெயர்,
    வயது, பாலினம், மொபைல்
    எண், அடையாள அட்டை
    குறித்த தகவல்களை பதிவு
    செய்ய வேண்டும்.
  • அந்த அடையாள
    அட்டையை ஸ்கேன் செய்து
    பதிவிடுவது கட்டாயம்.
  • கடைசியாக நீங்கள்
    பயணப்படும் வாகனம், அதன்
    எண் ஆகியவை குறித்து
    கேட்கப்படும். தேவையென்றால் அதையும் பதிவு செய்து
    கொள்ளலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular