மகளிா் திட்டம் தொடா்பான செயல்பாடுகளை தெரிந்துக் கொள்ள வாழ்வாதார உதவி எண்ணில் அழைக்கலாம் என்று அரியலூா் ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிா் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், ஐயப்பாடுகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடா்பான திட்ட விவரங்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துதல், வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல் ,பெறுதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.
மேலும், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞா்கள் சுய தொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் இந்த எண்ணில் கேட்டறியலாம். பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞா்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங்கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்து தகவல்கள் பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


