📍 மதுரை – தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாலும், மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், பயிற்சிக்காக உடல்தானம் செய்யும் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
🏫 மதுரை அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பெரிய கல்லூரிகளில், தற்போது MPBS மாணவர் சேர்க்கை 150 லிருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
🔬 முதலாண்டு மாணவர்களுக்கு “அனாடமி (உடற்கூறியல்)” பாடம் கட்டாயமாக உள்ளது. இதற்காக மனித உடல்களை ஆய்வுக்காக பதப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம்.
🧾 மருத்துவமனை ஆர்.எம்.ஓ. சரவணனின் விளக்கம்:
“கடந்த 19 மாதங்களில் 80 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. ஆனால் மாணவர் எண்ணிக்கையைப் பொருத்தவரை இது போதவில்லை. இதனால்தான் அதிக உடல்தானம் தேவைப்படுகிறது.”
📌 உடல்தான செயல்முறை – பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டியவை:
- உயிருடன் இருக்கும்போதே உடல்தான ஒப்பந்தம் செய்யலாம்
- தேவையான ஆவணங்கள்: ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், 3 புகைப்படங்கள், 2 கைபேசி எண்கள்
- கல்லூரி அனாடமி துறையில் பதிவு செய்ய வேண்டும்
- இறந்தவுடன் தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் இலவசமாக உடலை எடுத்துச் செல்லும்
- இறுதிச்சடங்கு செய்ய இடம் ஒதுக்கப்படும்
- உடல்தானத்திற்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்
❗ முக்கிய குறிப்பு:
- தற்கொலை, விபத்தில் இறப்பு, அல்லது பிரேத பரிசோதனை உடல்கள் தானம் செய்ய முடியாது
- அடையாளம் தெரியாத உடல்கள் (உறவினர் வராதது போன்ற சூழலில்) அரசு அனுமதியுடன் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படும்
- ஒருவரால் உடல்தானம் செய்யாமல் இறந்திருந்தாலும், குடும்பத்தினர் விரும்பினால், மருத்துவமனை RMO-வைக் அணுகி முடிவு செய்யலாம்
🔔 மேலும் கல்வி மற்றும் மருத்துவ அப்டேட்களுக்கு:
👉 WhatsApp: https://www.tamilmixereducation.com/tamil-mixer-education-whats-app-group/
👉 Telegram: https://t.me/jobs_and_notes
👉 Instagram: https://www.instagram.com/tamil_mixer_education/
❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 https://superprofile.bio/vp/donate-us-395
🙏 உடல்தானம் என்பது மனிதநேயத்தின் உன்னத வடிவம்!
தற்போதைய மாணவர்கள் மருத்துவராக உருவாக, நமது பங்களிப்பும் முக்கியமானதாக அமையும்!
📢 இந்த செய்தியை awareness spread ஆக friends-க்கும் forward பண்ணுங்க!