Thursday, August 14, 2025
HomeBlogமெட்ராஸ் தின நிகழ்ச்சிகள் - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

மெட்ராஸ் தின நிகழ்ச்சிகள் – பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

மெட்ராஸ் தின
நிகழ்ச்சிகள்பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

சென்னை
மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு
ஆண்டும் ஆக.22-ஆம்
தேதி மெட்ராஸ் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
மதராசப்பட்டினம் 1639-ஆம்
ஆண்டு முதல் தற்போது
வரை பல்வேறு நிலைகளில்
வளா்ச்சி அடைந்து சென்னை
மாநகரமாக 382வது ஆண்டை
நிறைவு செய்துள்ளது.

மேலும்
இந்தச் சிறப்பு மிக்க
மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை
மாநகராட்சியின் சார்பில்
பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
தூய்மைப் பணி உள்பட
பல்வேறு நிகழ்ச்சிகளும், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ,
மாணவியா்கள் மற்றும் கலைஞா்கள்
பங்குபெறும் வகையில் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

அதன்படி,
குடிசைப் பகுதிகளில் சுவா்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களை
சுய புகைப்படம் (செல்ஃபி)
எடுத்து 94451 90856 என்ற
எண்ணுக்கு கட்செவி அஞ்சல்
(
வாட்ஸ் அப்) வாயிலாக
அனுப்பி வைக்கலாம். இதில்
சிறந்த சுவா் ஓவியங்கள்
மாநகராட்சியின் சுட்டுரை
தளத்தில் பகிரப்படும். மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் நீா்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து பகிரலாம். ஆா்வமுள்ள
பொதுமக்கள், தன்னார்வலா்கள் மற்றும்
தனியார் தொண்டு நிறுவனங்கள் மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், மேலும்,
இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக
கொண்டாட சிஎஸ்ஆா் நிதியை
வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் தங்களுடைய
விவரங்களை 
இணைப்பில் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும், மாநகராட்சியின் சார்பில்
ஆக.20,21 ஆகிய தேதிகளில்
சிங்காரச் சென்னை குறித்த
ஓவியப் போட்டி (14 வயதுக்குள்பட்டவா்கள்), சிங்காரச் சென்னை
குறித்த புகைப்படப் போட்டி,
ஆக.22-ஆம் தேதி,
மாநகராட்சி கட்டடச் சுவா்கள்,
பாலங்களின் கீழுள்ள இடங்கள்
மற்றும் இதரப் பொது
இடங்களை மறுவடிவமைக்கும் திட்ட
வரைபடப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் கலந்து
கொள்ள விருப்பமுள்ள நபா்கள்
தங்களுடைய படைப்புகளை இணையதள
இணைப்பில், குறிப்பிட்டுள்ள போட்டிகளுக்கான நாள்களில் பதிவேற்றம் செய்யலாம்.

இதுதவிர,
சென்னை மாநகரின் அடையாளத்தைக் குறிக்கும் சிற்பங்களைத் தயார்
செய்து ஆக.22 முதல்
28-
ஆம் தேதி வரை
நேரடியாக மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள சென்னை சீா்மிகு
நகரத் திட்ட அலுவலகத்தில் வழங்கலாம். மேலும், விவரங்களுக்கு 94451 90856 என்ற கட்செவி
அஞ்சல் எண்ணை அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments