ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கடை கல் இயந்திரம் இயக்கும் பயிற்சி
திருப்பூா் மாவட்டதில் தாட்கோ மூலமாக 10- ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாட்கோ மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோந்தவா்களாகவும் 10- ஆம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்கான கால அளவு 6 மாதங்கள் 15 நாள்களாகும். பயிற்சியின் முடிவில் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் பெறலாம்.
இந்தப் பயிற்சிக்கு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை 0421-297112, 94450-29552 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow