குறைவான வட்டியில்
கல்விக்கடன் – எந்த வங்கியில்
கல்விக்கடன் பெறுவது சிறந்தது?
அரசு
பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும்
என்பது பலருக்கு எட்டாக்
கனியாக இருந்து வருகிறது.
கல்லூரிகளில் கல்விக்கான கட்டணத்தை செலுத்த முடியாமல்
திணறும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதற்காக
அரசும், உதவித்தொகை போன்ற
பல்வேறு நலத்திட்டங்கள் மூலம்
மாணவர்களுக்கு உதவி
செய்து வருகிறது.
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில்
கொண்டு வங்கிகளில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது. அதன்படி
மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்காக தேவையான பணத்தை
வங்கிகளிலிருந்து கடனாக
பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு
கடன் பெற்ற மாணவர்கள்
படித்து முடித்தவுடன் தங்கள்
கடன்களை வட்டியுடன் திரும்ப
செலுத்த வேண்டும். இதற்காக
பல்வேறு சலுகைகளுடன் கூடிய
குறைந்த வட்டியுடன் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகிறது.
அந்த
வகையில் ஸ்டேட் பேங்க்
ஆஃப் இந்தியா வங்கியில்
மாணவர்களின் கல்விக்கடனுக்காக 6.85 சதவீதம்
மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. இதே போல
பேங்க் ஆஃப் இந்தியா,
பேங்க் ஆஃப் பரோடா
வங்கிகளிலும் குறைந்த
அளவு வட்டி வீதமே
வசூலிக்கப்படுகிறது. அதனால்
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் இத்தகைய வங்கிகளில் குறைந்த வட்டியுடன் கடனை
பெற்றுக் கொள்ளலாம்.