குறைந்த கட்டணத்தில் இசைப்பள்ளி – இலவச
விடுதி, ஊக்கத்தொகை
ஒருகாலத்தில் இசை வளர்த்த திருவாரூரில் தற்போது இயங்கி வரும்
அரசு இசைப்பள்ளி, ஏராளமான
சலுகைகளோடு, இசை ஆர்வலர்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சி
அளித்துவருகிறது. இசை
கற்றுக்கொள்வதென்பது, மனநிறைவுக்கானதாகவும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்குரியதாக மட்டுமில்லாமல், தற்போது
வேலை வாய்ப்பு அளிக்கக்கூடியதாகவும் திகழ்கிறது.
தமிழக
அரசின் கலை பண்பாட்டுத் துறையின்கீழ், திருவாரூர் வாசன் நகரில் மாவட்ட
அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் வயலின், மிருதங்கம் குரலிசை,
நாதஸ்வரம், தவில், தேவாரம்,
பரதநாட்டியம் ஆகிய
கலைகளில் 3 ஆண்டுகள் முழு
நேரப் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி
கிருஷ்ணன் இசை ஆர்வலர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்துள்ளார்.
இப்பள்ளியில் தற்போது, நிகழாண்டுக்கான மாணவ,
மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியில் பயிலும்
மாணவர்களுக்கு அரசு
விதிகளின்படி இலவச
விடுதி வசதி, கல்வி
உதவித்தொகை, இலவச பஸ்
கட்டணச் சலுகை மற்றும்
மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400 வழங்கப்படுகிறது. இதில்
சேர்வதற்கு 12 முதல் 25 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். குரலிசை,
பரதநாட்டியம், வயலின்,
மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சியும், நாதஸ்வரம், தவில், தேவாரம்
ஆகிய கலைகளுக்கு தமிழ்
எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும் போதுமானது. ஆண்டுக்கு
கல்விக் கட்டணமாக ரூ.152
மட்டும் செலுத்த வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, இசைப்
பள்ளி தலைமை ஆசிரியரை
அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


