Home Blog அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

0

Letter writing competition organized by Department of Posts

அஞ்சல் துறை
சார்பில் கடிதம் எழுதும்
போட்டி

அஞ்சல்துறை சார்பில் கடிதம் எழுதும்
போட்டியில் பங்கேற்கலாம் என
அத்துறையின் விருதுநகா் கோட்ட
முதுநிலை கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளார்.

சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்திய
அஞ்சல்துறை மக்களிடையே கடிதம்
எழுதும் பழக்கத்தை புதுப்பிக்கும் வகையில் கடிதம் எழுதும்
போட்டியை நடத்தி வருகிறது.
2019-2020
ம் ஆண்டில் நடைபெற்ற
போட்டியில் தமிழகம் முழுவதும்
3.62
லட்சம் பேர் பங்கேற்றனா். இந்த ஆண்டு
போட்டியில், 2047ல் இந்தியாஒரு
பார்வை என்ற தலைப்பில்
கடிதம் எழுத வேண்டும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம்,
ஹிந்தி, தமிழ் ஆகிய
மொழிகளில் கடிதம் எழுதலாம்.18
வயதுக்கு உள்பட்டோர் மற்றும்
18
வயக்கு மேற்பட்டோர் ஆகிய
இரு பிரிவுகளில் போட்டி
நடைபெறும். உள்நாட்டு கடித
அட்டை அல்லது உறையைப்
பயன்படுத்த வேண்டும். கடிதம்
கண்டிப்பாக கையினால் எழுதப்பட
வேண்டும்.

உறை
வகைகளுக்கு 4 அளவு
காகிதத்தில் எழுத வேண்டும்.
உறை வகைகளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும், உள்நாட்டு கடித
அட்டையில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும்
எழுத வேண்டும். தூதஞ்சல்
மூலம் அனுப்பப்படும் கடிதங்கள்
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பங்கேற்பாளா்கள் தங்களது வயதுச் சான்றிதழை
இணைக்க வேண்டும். ஜூலை
1
ம் தேதி போட்டி
தொடங்கியுள்ளது. கடிதங்களை
அனுப்ப கடைசி நாள்
அக்டோபா் 31ம் தேதி.

தேசிய
அளவில் தோவு செய்யப்படும் முதல் மூன்று கடிதங்களுக்கு பரிசளிக்கப்படும். கடிதங்களை
முதன்மை அஞ்சல்துறைத் தலைவா்,
தமிழ்நாடு வட்டம், சென்னை
– 600 002
என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version