புதுச்சேரி பல்கலைகழகத்தில் இலவச இணைய வழி
வகுப்புகள் தொடக்கம்
புதுச்சேரி பல்கலைகழகத்தில் இந்த
ஆண்டு இரண்டு இலவச
இணைய வழி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிப்புகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதிதாக
மத்திய அரசின் கல்வி
அமைச்சகத்தின் சார்பில்
புகைப்பட இதழியல் மற்றும்
ஊடக சட்டம் ஆகிய
இரண்டு பிரிவுகளில் இலவச
வகுப்புகள் தொடங்கபட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் பங்குபெறலாம் வயது
வரம்பு எதுவுமில்லை.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
15 வார
கால இந்த பயிற்சி
பல்கலைகழக பேராசிரியர்கள் முனைவர்
ராதிகா கண்ணா மற்றும்
முனைவர் அருள்செல்வன் ஆகியோரின்
வழிகாட்டுதலில் நடைபெறுகின்றது. மாணவர்களிண் தனி திறன்களை
மேம்படுத்தும் விதமாக
உருவாக்கபட்டுள்ளது.
புகைபடம்
எடுத்தலில் புகுத்த வேண்டிய
புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்திய
அரசியலமைப்பு மற்றும்
ஊடகம் தொடர்பான சட்டங்கள்,
அறநெறிகள் போன்ற பல்வேறு
பயனுள்ள பாடத்திட்டங்களும் ஊடகச்
சட்டம் பாடப்பிரிவில் பயிற்சி
தரபடவுள்ளன.
இதுவரை
1600க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாதம்
இறுதி வரை விண்ணப்பிக்கலாம். இதன் முழு
விபரங்களுக்கு பல்கலைக்கழக கல்வி பல்லுாடக ஆராய்ச்சி
மையத்தை தொடர்பு கொள்ளலாம்.


