PAN, ஆதார் கார்டு
இணைக்க நாளை இறுதி
நாள் – ரூ.10000 அபராதம்
வருமான
வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்)
தாக்கல் செய்ய PAN – ஆதார்
இணைப்பை மத்திய அரசு
கட்டாயமாக்கியுள்ளது. ஆதார்
கார்டு உடன் பான்
இணைக்கப்படவில்லை என்றால்,
வங்கிக் கணக்கு பணிவர்த்தனைகள், ஓய்வூதியம், உதவித்தொகை மற்றும்
LPG மானியம் போன்ற பண
பலன்களைப் பெறுவது போன்ற
நிதி பரிவர்த்தனைகளுக்கு பழைய
பான் கார்டினை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தாக்கல்
செய்யப்பட்ட நிதி மசோதாவில்
இது அறிவிக்கப்பட்டது.
அதன்படி
ஒரு நபர் தனது
பான் கார்டுடன் ஆதார்
எண்ணை குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் இணைக்காவிடில் அவருக்கு
10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த பான்
கார்டு செல்லாது எனவும்
அறிவுறுத்தப்பட்டது. வருமான
வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, அதற்கான கால
அவகாசம் மார்ச் 31ம்
தேதிக்குள் (நாளை) முடிவடைகிறது.
வங்கிக்
கணக்கினை கையாள்வது, நிதி
அல்லது பங்குகளை வாங்குவது
மற்றும் ரூ.50,000 க்கும்
அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்வது போன்ற பல
செயல்களுக்காக பான்
அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.
ஆதார் எண்ணுடன் PAN கார்டு இணைக்க மார்ச் 31 கடைசி நாள்:
Click
Here
ஆன்லைனில் ஆதார் மற்றும் பான் (PAN) இணைப்பது எப்படி?: Click
Here