‘UPSC/TNPSC குரூப் 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்ற தலைப்பில் இந்த பயிற்சி முகாம் நடக்கவிருக்கிறது. இது போன்ற பயிற்சி முகாமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆனந்த விகடனும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியும் இணைந்து நடத்தியிருக்கிறது.
அடுத்தப்படியாக மீண்டும் இந்த நிகழ்வு சென்னையில் நடக்கவிருக்கிறது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் வருகிற ஜூலை 14-ம் தேதி இந்த இலவச பயிற்சி முகாம் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்வில் பல ஆளுமைகள் பங்கேற்று போட்டி தேர்வு கனவுடன் இருப்பவர்களுக்கு ஊக்க உரையளிப்பார்கள். அது போல இம்முறையும் பல ஆளுமைகள் பங்கேற்கவுள்ளனர்.
கோ ஆப்டெக்ஸின் மேலாண்மை இயக்குநர் R. ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ், சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் R. சுதாகர் ஐ.பி.எஸ், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சத்ய ஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கவிருக்கிறார்கள். காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வுக்கு அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு செய்திருக்க வேண்டும்!
இந்த இலவசப் பயிற்சி முகாமில் ஓராண்டு இலவச பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துக் கொள்பவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இந்திய குடிமை பணி தொடர்பான நடப்பு நிகழ்வுகள், முதல் நிலை மற்றும் முதன்மை நிலை தேர்வுகளுக்கான கேள்வி பதில் தாள்கள் வழங்கப்படும்.
இந்த முகாமில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறீர்களா? உடனடியாக கீழே இணைக்கப்பட்டுள்ள கூகிள் பார்மை பூர்த்தி செய்யுங்கள் அல்லது இந்த எண்ணுக்கு (044 – 66802997) உடனடியாக மிஸ்டு கால் கொடுத்து முன்பதிவு செய்யுங்கள்!
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow