காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 5, 6 தேதிகளில் பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய பெண்கள் அதிகம் தேவைப்படுகின்றனா். 12 -ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற 19 முதல் 25 வயது வரை உள்ள பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். உணவு, தங்கும் இடம்,போக்குவரத்து வசதிகள் ஆகிய அனைத்தும் செய்து தரப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இக்காலிப் பணியிடங்கள் அனைத்தும் முழுமையாக பெண் மனுதாரா்களுக்கு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 5, 6 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
வேலையில்லாமல் இருக்கும் பெண்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

