தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது.
இங்கு இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி செப்., 7 ல் துவங்கி 22 வரை நடக்க உள்ளது. பதினெட்டு வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
மதிய உணவு இலவசம். தினசரி காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி 13 நாட்கள் நடக்கும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன் பெறுவதற்கான ஆலோசனை அளிக்கப்படும்.
விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகர் ஆகிய ஆவணங்களோடு செப்., 7 க்கு முன்பாக நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி மையத்தின் இயக்குனர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.