ராணுவத்தில் வேலை
வாய்ப்பு – விழிப்புணர்வு ஏற்படுத்த
அறிவுரை
கடற்படை
உட்பட இந்திய ராணுவ
படை தேர்வுகள் குறித்து,
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை
ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
பள்ளி கல்வித் துறையின்,
நாட்டு நலப்பணி திட்டமான
என்.எஸ்.எஸ்.,
பிரிவு இணை இயக்குனர்
அமுதவல்லி, மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிஉள்ள சுற்றிக்கை: இந்திய கடற்படையில் இதுவரை ஆண்டுக்கு 2,000 மாலுமிகள்
பணி அமர்த்தப்பட்டனர். இந்த
எண்ணிக்கை சமீபத்தில் 7,000 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. எனவே,
அதிக வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பத்தாம்
வகுப்பு அல்லது பிளஸ்
2 முடித்தவர்கள், இந்திய
கடற்படை பணியில் சேர,
நுழைவு தேர்வு எழுதி
தேர்ச்சி பெற முடியும்.தமிழகத்தில் இருந்து கடற்படையில் சேருவோர்
எண்ணிக்கை, வெறும் 2 சதவீதமாக
உள்ளது. தமிழக மாணவர்களுக்கு, ராணுவம், கடற்படை மற்றும்
பாதுகாப்பு படையில் சேருவதற்கான விழிப்புணர்வு குறைவாக
உள்ளது.எனவே, ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியில்
சேருவதற்கான நுழைவு தேர்வுகள்,
ஆட்கள் தேர்வு முறை
குறித்து, பள்ளிகள் வழியே
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராணுவ
நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி
பெற, உரிய பயிற்சி
பெறவும் மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


