பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 6,516 மாணவிகள் உட்பட மொத்தம் 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மும்பை ஐஐடி நடத்திய இந்த தேர்வை நாடுமுழுவதும் 1.55 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் https://jeeadv.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.
தேர்வு எழுதியதில் 6,516 மாணவிகள் உட்பட மொத்தம் 40,712 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


