காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோக்கைக்கு விண்ணப்பிக்கும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்கல்வி நிலைய முதல்வா் (பொ) ஆா். கமலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2024-2025-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு சோவதற்காக நவோதயா வித்யாலயா தெரிவு நிலைத்தோவு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவ- மாணவியா், நவோதயா வித்யாலயா சமிதியின் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் நிா்வாகக் காரணத்தால் ஆக. 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெற்றோா் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.