TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
புதுச்சேரியில் ITI.,
சேர்க்கைக்கு 24ம்
தேதி கலந்தாய்வு
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும்
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 24ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து, தொழிலாளர் துறை செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள
அரசு மற்றும் தனியார்
தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்க
உள்ளது. இதற்கான முதல்கட்ட
கலந்தாய்வு வரும் 24ம்
தேதி, வம்பாகீரப்பாளையத்தில் உள்ள
அரசு மகளிர் தொழில்
பயிற்சி மையத்தில் நடக்கிறது.
அன்று
காலை 9.30 மணி முதல்,
1.00 மணி வரையில் விடுதலை
போராட்ட வீரர்களின் வாரிசுகள்,
விளையாட்டு வீரர்கள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் 10ம்
வகுப்பில் 500க்கு 200க்கு
மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வில்
200க்கு குறைவாக மதிப்பெண்
பெற்றவர்களுக்கு அன்று
பகல் 2.00 மணி முதல்
கலந்தாய்வு நடைபெறும்.இந்த
முதல் கலந்தாய்வு, 10ம்
வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow