தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயன்று தேர்ச்சி பெற்ற என் டி சி,என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
அதனைப் போலவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று மேற்கண்ட சான்றிதழ்களை பெற்றால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று அல்லது தபால் மூலமாக பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


