தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு தமிழ்
வழிக் கல்விக்கான சான்றிதழ்
சமர்ப்பிக்க அவசியமில்லை என்று
உத்தரவிட வேண்டும்
தமிழகத்தில் TNPSC குரூப்2,2A தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்
வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் அவசியம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்
பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களுக்கும் தமிழ் வழி
சான்றிதழ் கேட்பது கேலிக்கூத்தானது என்று தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் TNPSC போட்டித்
தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில்
கடந்த மாதம் குரூப்2,2A
தேர்வு குறித்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது. 
அதில்
மார்ச் 23ம் தேதி
முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மே 21ம்
தேதி தேர்வு நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தேர்வர்கள் ஆன்லைன்
வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். 
இந்தாண்டு
முதல் TNPSC தேர்வாணையம் தேர்வு
முறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 
அதாவது
தமிழ் மொழிக்கும், தமிழ்
மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ்
மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும்
இத்தேர்வில் 40% மதிப்பெண்கள் பெறுவதும்
அவசியமாகும் என்றும் தமிழ்
மொழித்தேர்வு தகுதித்தேர்வாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கியுள்ளது. 
அதனால்
தேர்வர்கள் தமிழ் வழியில்
பயின்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது
வழிக் கல்வி கற்றதற்கான சான்றை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் அதற்கான சான்றை
பெற்று அதன் பிறகே
விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த
சான்றிதழை தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களிடமும் கேட்பது
கேலிக்கூத்தானது என்று
தமிழ் ஆர்வலர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். 
தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கும் தமிழ் வழி
சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
என்பதை ஏற்க முடியாது.
அரசு உடனடியாக இதில்
தலையிட்டு இந்த நடைமுறையை
மாற்ற வேண்டும். 
தமிழ்ப்
பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு தமிழ் வழிக்
கல்விக்கான சான்றிதழ் சமர்ப்பிக்க அவசியமில்லை என்று உத்தரவிட
வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


