Wednesday, August 13, 2025
HomeBlogஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் - பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி...

ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் – பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா

ஆதார் எண்ணை
வங்கி கணக்குடன் இணைப்பது
அவசியம்
பிரதம மந்திரி கிசான்
சம்மன் நிதி யோஜனா

பிரதம
மந்திரி கிசான் சம்மன்
நிதி யோஜனா திட்டம்
மூலம், விவசாயிகள் வருடத்திற்கு ரூ.6000 பெற, அவர்கள்
தங்கள் ஆதார் எண்ணை
அவர்களின் வங்கி கணக்குடன்
இணைப்பது அவசியமாகும்.

இல்லையெனில் அவர்களுக்கு இந்த நிதியுதவி
கிடைக்காமல் போகலாம்.

பிரதமர்
கிசான் சம்மன் நிதி
யோஜனா திட்டத்தின் 10வது
தவணையை விவசாயிகள் பெற
இன்னும் சில நாட்களே
உள்ளன. மேலும் சமீபத்திய
பலனைப் பெற, பயனாளிகள்
தங்கள் வங்கி கணக்கை
ஆதார் அட்டையுடன் இணைக்க
வேண்டும். பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு
விவசாயிக்கும் இது
அவசியம், இந்த இணைப்பு
இல்லாமல் அவர்கள் எந்தப்
பலனையும் பெற வாய்ப்பில்லை.

பிரதம
மந்திரி கிசான் திட்டம்
2018
டிசம்பரில் மத்திய அரசால்
நிதியுதவி தேவைப்படும் விவசாய
குடும்பங்களுக்கு உதவி
வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர்
நரேந்திர மோடி தொடங்கி
வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில்,
நிலம் வைத்திருக்கும் அனைத்து
விவசாயிகளின் குடும்பங்களுக்கும் பிஎம் கிசான்
திட்டம் பொருந்தும். இப்போது,
​​இத்திட்டம் சிறு மற்றும் குறு
விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது, ஆனால் ஆரம்பத்தில் சிறு
மற்றும் குறு விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

PM கிசான்
திட்டத்தின் கீழ் வரும்
ஒரு விவசாயி குடும்பம்,
அரசிடமிருந்து ஆண்டுக்கு
ரூ.6,000 பெற தகுதியுடையது. இந்த உதவித் தொகை
தலா ரூ.2,000 வீதம்
மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் மூன்று
காலாண்டு தவணைகளில் நேரடியாக
விவசாயிகளின் கணக்கில்
பணம் மாற்றப்பட்டு வருகிறது.

தங்கள்
பெயரில் விவசாய நிலம்
வைத்திருக்கும் விவசாயிகள் குடும்பங்கள், PM Kisan திட்டத்தின் கீழ் பயன் பெற
தகுதியுடையவர்கள். இருப்பினும், நிறுவன நில உரிமையாளர்கள் மற்றும் வருமான வரி
செலுத்துபவர்கள் இந்த
திட்டத்தில் இருந்து எந்த
நன்மையையும் பெற தகுதியற்றவர்கள்.

தங்கள்
கணக்குடன் ஆதார் இணைக்கப்படாவிட்டால் எந்த விவசாயிக்கும் எந்த பலனும் கிடைக்காது. ஆதார் இணைக்கப்பட்ட விவசாய
குடும்பங்களுக்கு மட்டுமே
திட்டத்தின் பயனாக ஆண்டுக்கு
6,000
ரூபாய் கிடைக்கும்.

ஆதாரை இணைப்பது எப்படி?

உங்கள் ஆதார்
அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக்
கிளைக்குச் செல்லவும்.

ஆதார் அட்டையின்
புகைப்பட நகலில் வங்கி
அதிகாரி முன்னிலையில் உங்கள்
கையொப்பத்தை இடுங்கள்.

உங்கள் ஆதார்
சரிபார்க்கப்பட்ட பிறகு
உங்கள் வங்கியால் ஆன்லைன்
மூலம் உங்கள் கணக்கில்
12
இலக்க ஆதார் எண்
நிரப்பப்படும்.

சரிபார்ப்புக்குப் பிறகு,
அதை உறுதிப்படுத்தும் SMS உங்களுக்கு வரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular