தமிழகத்தில் முககவசம்
அணிவது கட்டாயம் – தமிழக
அரசு
தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயம்
என தமிழக அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக
குறைந்து விட்டது. தினசரி
பாதிப்பு 22 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
ஆனால்
டெல்லி உள்ளிட்ட ஒரு
சில மாநிலங்களில் கொரோனா
தொற்று மீண்டும் அதிகரிக்க
தொடங்கி உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று
பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடும் அளவிற்கு இல்லை என்றாலும்
கூடுதல் கவனம் செலுத்த
அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து பொது இடங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொது
போக்குவரத்து, தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம்
முகக்கவசம் அணிய வேண்டும்
என்று தமிழக அரசு
உத்தரவு பிறப்பித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


