குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு – TNPSC
தமிழக
அரசின் பல்வேறு துறைகளில்
காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு
செய்து வருகிறது
இதற்காக
பல்வேறு போட்டித் தேர்வுகள்
மற்றும் நேர்காணல் ஆகியவை
நடத்தப்படுகிறது.
அந்த
வகையில் தமிழகத்தில் ஜூன்
19ம் தேதி மாவட்ட
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
பதவிக்கான கணினி வழித்
தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால்
டிக்கெட்டை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் நேற்று
வெளியிட்டது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வுகளுக்கான ஹால்
டிக்கெடை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in
மற்றும் www.tnpscexams.in
இல் வெளியிட்டுள்ளது.
தேர்வு
எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை மேலே குறிப்பிட்டுள்ள இணையதளம்
மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


