அரசு இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2022 – 2023ம் ஆண்டுக்கான சேர்க்கை துவங்கிஉள்ளதாக, இசைப்பள்ளியின் தலைமையாசிரியர் என்.ரமணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
இசையில் ஆர்வமுள்ள மாணவ–மாணவியர், கலைப்பிரிவுகளில் சேருவதற்கான, இந்தாண்டு சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது. குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய கலைப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.கலைப்பிரிவுகளில் சேரும் மாணவ – மாணவியருக்கு மூன்றாண்டுகளுக்கு பிறகு சான்றிதழ் வழங்கப்படும். மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும்.
12 வயது முதல் 25 வயதுள்ள மாணவர்கள் சேரலாம். பயிற்சி கட்டணமாக, ஆண்டுக்கு 350 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதியும், இலவச விடுதி வசதியும் ஏற்பாடு செய்யப்படும். மாணவ, மாணவியர் அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோவில்களில் மற்றும் இசை ஆசிரியராக பணியாற்ற முன்னுரிமை வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


