TNPSC
குரூப் 4 இலவச பயிற்சி
வகுப்பில் பங்கேற்க முன்னாள்
படைவீரா்களுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள குரூப் குரூப்
4 இலவச பயிற்சி வகுப்பில்
பங்கேற்க முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் (பொ) நா. அங்கையற்கண்ணி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையம் மூலம் ஜூலை 24ல்
குரூப் குரூப் 4 தேர்வு
நடைபெற உள்ளது. இத்தேர்வில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த
முன்னாள் படைவீரா்கள் அதிகளவில்
பங்கேற்று வெற்றி பெறும்
வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், அங்குள்ள
கூட்ட அரங்கில் ஏப்.
20ம் தேதி காலை
10.30 மணிக்கு இலவச பயிற்சி
முகாம் நடைபெற உள்ளது.
இதில், முன்னாள் படைவீரா்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


