Saturday, August 9, 2025
HomeBlogசிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு ஆதார் விவரங்களை பதிவேற்ற அழைப்பு

சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு ஆதார் விவரங்களை பதிவேற்ற அழைப்பு

Invitation to upload resource details for Minority Scholarships

சிறுபான்மையினா் கல்வி
உதவித் தொகைக்கு ஆதார்
விவரங்களை பதிவேற்ற அழைப்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்
தொகை பெறும் மாணவ,
மாணவிகள் தங்களது ஆதார்
விவரங்களை பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய
அரசானது சிறுபான்மையின மாணவ
மாணவிகளுக்கு கல்வி
உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களில் பள்ளிப் படிப்பு, பள்ளி
மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டங்களை ஒப்பிடும்போது தகுதி,
வருவாய் அடிப்படையிலான கல்வி
உதவித்தொகை பெறும் மாணவ,
மாணவிகள் மிகக் குறைவான
எண்ணிக்கையில் ஆதார்
பதிவேற்றியுள்ளனா்.

2021-2022ம்
கல்வியாண்டு முதல் மத்திய
அரசின் சிறுபான்மையினா் நலத்துறை
அமைச்சகம், தேசிய கல்வி
உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் ஆதார் விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயமாக்கியுள்ளது.

தகுதி
மற்றும் வருவாய் அடிப்படையிலான திட்டத்தில் ஆதார் விவரங்களை
ஒப்பளிப்பு செய்யும் மாணவ,
மாணவிகளுக்கு மட்டுமே
கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக
விண்ணப்பிப்போர் வரும்
டிச.31 க்குள்ளும், புதுப்பிப்போர் வரும் ஜன.15-க்குள்ளும் ஆதார் விவரங்களைப் பதிவேற்ற
வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவ,
மாணவிகளுக்கு இது
தொடா்பாக குறுஞ்செய்தியும் அனுப்பப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments