திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு
பங்கேற்க அழைப்பு – கோவை
தோட்டக்கலை துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியதாவது:
தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை
சார்பில், ஆனைகட்டி, கண்ணம்பாளையத்தில் செயல்பட்டு வரும்
தோட்டக்கலைப்பண்ணைகளில், சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல்,
நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல், பராமரிப்பு செய்தல்,
தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகியவை அடங்கிய பயிற்சி,
30 நாட்கள் வழங்கப்பட உள்ளது.
ஆதி
திராவிடர், பெண்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், www.tnhorticulture.tn.gov.in என்ற
இணையதளத்தில் இருந்து
விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி
செய்து மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர்
அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு போக்குவரத்து செலவுக்காக தினமும், ரூ.100
வழங்கப்படும். குறைந்தபட்சம், 85 சதவீதம் வருகைப்பதிவு உள்ளவர்களுக்கு மட்டுமே, தேர்வு எழுதிட
அனுமதி வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


