ராணுவ கல்லூரியில் சேர அழைப்பு
டேராடூன்
ராணுவ கல்லுாரியில்,எட்டாம்
வகுப்பு சேர்க்கை நடைபெறவுள்ள நிலையில், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்ரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள
ராஷ்ட்ரிய மிலிட்டரி அகடாமியில் 2023, ஜன., மாதம்
எட்டாம் வகுப்பு சேர்க்கை
துவங்குகிறது.
இதற்கான
எழுத்துத் தேர்வு, வரும்
ஜூன் மாதம், 4ம்
தேதி நடக்கிறது.
இதில்
தேர்வு செய்யப்படுவோர் மட்டுமே
நேர்முகத் தேர்வில் பங்கேற்க
அனுமதிக்கப்படுவர். எனவே,
எழுத்துத் தேர்வில் பங்கேற்க
விரும்புவோர், -2023, ஜனவரி
ஒன்றாம் தேதி, பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயது
அடையாதவராகவும் இருத்தல்
வேண்டும்.அவ்வகையில், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம்
வகுப்பு பயின்று தேர்ச்சி
பெற்ற மாணவ, மாணவியர்
கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை, பெற, ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரிய
இந்தியன் மிலிடரி கல்லுாரி,
கர்ஹிகான்ட், டேராடூன் – 248 003, உத்தரகாண்ட் மாநிலம்‘ என்ற முகவரிக்கு உரிய கட்டணம் செலுத்த
வேண்டும்.ஆன்லைன் வாயிலாக
கட்டணம் செலுத்தவும் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
பொதுப்பிரிவினர், 600 ரூபாயும்,
பிற வகுப்பினர், 555 ரூபாய்
கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேபோல், பூர்த்தி செய்த
விண்ணப்பங்களை, தேர்வுக்
கட்டுப்பாட்டு அலுவலர்,
3 தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம், பூங்கா நகர்,
சென்னை – 3, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி
கடைசி நாளாகும்.
விபரம்
அறிய www.rimc.gov.in
எனும் இணையதளத்தை பார்வையிடலாம் என திருப்பூர் மாவட்ட
நிர்வாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


