HomeBlogமாற்றுத்திறனாளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன்பெற அழைப்பு - சேலம்

மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன்பெற அழைப்பு – சேலம்

மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு
நலத்திட்டங்களை பெற்று
பயன்பெற
அழைப்பு
சேலம்

சேலம் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம்
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. செவ்வாயில், தேசிய அடையாள அட்டை
வழங்கப்படுகிறது. இதற்கு
நான்கு பாஸ்போர்ட் போட்டோ,
ஆதார் அட்டை, ரேஷன்
கார்டுடன் விண்ணப்பிக்கலாம். ஒன்று
முதல், பட்ட படிப்பு,
பட்ட மேற்படிப்பு படிக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி
உதவித்தொகை வழங்கப்படுகிறது. மனவளர்ச்சி குன்றியவருக்கு, மாத
பராமரிப்பு தொகை, 1,500 ரூபாய்
வழங்கப்படுகிறது.

திருமண
உதவித்தொகை, 25 ஆயிரம் ரூபாய்,
8
கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. சுய தொழில்புரிய, 25 ஆயிரம்
ரூபாய் மானியத்துடன், 75 ஆயிரம்
வங்கி கடன் வழங்கப்படுகிறது. ஆவின் பாலகம் அமைக்க,
50
ஆயிரம் ரூபாய் முழு
மானியம், வங்கி கடன்
பரிந்துரை, வட்டியில்லா வங்கி
கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. அடையாள
அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள், அனைத்து டவுன்
பஸ்களில் இலவச பயணம்
செய்யவும், பிற மாவட்டங்களுக்கு செல்லும்போது, 4ல்
ஒரு பங்கு கட்டண
சலுகையுடன் பயணிக்கலாம்.

இதுபோன்று
பல்வேறு நலத்திட்டங்களை பெற்று,
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம். விபரம் பெற, கலெக்டர்
அலுவலகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகத்தை நேரிலோ, 0427 – 2415242 என்ற
எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular