வீட்டில் இருந்தபடியே விவசாயிகளுக்கு கடன் பெற்றுத்தர ‘அக்ரி பை’ எனப்படும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் நல்ல விளைச்சலை பெற உரிய நேரத்தில் விதை, உரம் போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணமும் தேவை. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு வங்கியில் கடன் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. கூட்டுறவு வங்களில் கிடைக்கும் கடன் தொகை அவர்களுக்கு போதமானதாக இல்லை.தேசிய வங்கிகள், பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் 80 சததவீதம் விவசாயிகள் வெளியிடத்தில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய விவசாயிகளுக்கு சுலபமாக, தேவையான நேரத்தில் கடன் வழங்கும் நோக்கில் ‘அக்ரி பை’ எனப்படும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களது தாலுகா, கிராமம், நிலத்தின் சர்வே நம்பர் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்; அதன்பிறகு உங்களுக்கு ஒரு முகவரி தயாராகும்; பின் ‘அக்ரி பை’ ஊழியர்கள் விவசாயிகளின் விபரங்களை வங்கிகளுக்கு அனுப்புவர். விவசயாகளுக்கு கடன் கிடைக்கும் வரை உதவுவர்.இந்த செயலி மூலம் விவசாயிகள், விவசாய வேலைகளை விட்டு வங்கிகளுக்கு அலைவது தவிர்க்கப்படும். வீட்டில் இருந்தபடியே கடன் கிடைக்கும். பொதுவாக விவசாயிகள் வங்கிக்கு கடன் கேட்டு செல்லும் போது அதிகாரிகள் தயக்கம் காட்டுவது வழக்கம். உரிய நேரத்தில் பணம் வசூல் செய்ய முடியாது என கருதுவர்.அத்தகைய வங்கிகளின் மனதை மாற்றும் முயற்சியை இவர்கள் மேற்கொள்வர். செயலியில் விவசாயியின் நிலம் எவ்வளவு; அதில் என்ன விளைவிப்பர்; எவ்வளவு லாபம் வரும் போன்ற தகவல்களை பதிவிட்டு வங்கிகளுக்கு புரிய வைப்பர். இதன் மூலம் விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்கும் என ‘அக்ரி பை’ நிறுவாக இயக்குனர் அபிலாஷ் திருப்பதி தெரிவித்துள்ளார்.மேலும் நிலத்தில் என்ன விளைவிக்கலாம்; எந்த மாதிரியான மருந்து தெளிக்கலாம்; எந்த உரம் போடலாம்; நோய் தாக்கினால் தீர்வு; வானிலை நிலவரம்; பயிர்களுக்கு மார்க்கெட்டில் தற்போது எவ்வளவு கிடைக்கும்; நான்கு மாதம் கழித்து எவ்வளவு விலை கிடைக்கும் போன்ற விபரங்களும் இடம் பெற்றிருக்கும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


