100 நாள் வேலை
போன்று சென்னையில் புதிய
திட்டம் அறிமுகம் – இதற்கு
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
100 நாள்
வேலை போன்று சென்னையில் புதிய திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. வேலையில்லா பிரச்னை அதிகரித்துள்ள சூழலில்
இத்தகைய திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை
பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை
வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ஏழை மக்கள்
பலன் அடைந்து வருகின்றனர். இதேபோன்ற திட்டம் நகர்ப்புறங்களிலும் கொண்டு வரப்பட
வேண்டும் என்பது மக்களின்
விருப்பமாக இருந்தது.
இந்த
நிலையில் சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு உறுதி
திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதற்கட்டமாக தண்டையார்
பேட்டை மற்றும் திருவிக
நகர் ஆகிய மண்டலங்களில் வேலை வாய்ப்பு உறுதி
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக
ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
18 வயது
முதல் 60 வயதுக்கு உட்பட்ட
எவரும் இந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஒரு நாள் கூலியாக
ரூ. 382 வழங்கப்படும். இது
அந்தந்த வார்டுக்கு உட்பட்டவர்களே பொருத்தமானதாக இருக்கும்
என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேர்வு
செய்யப்படுபவர்கள், குளத்தை
தூர்வாறும் பணி, மரக்கன்றுகளை தெருக்களில் நடுவது, வெள்ள
தடுப்பு பணிகள், நீர்நிலைகளை பராமரித்தல், கழிவு நீர்
கால்வாய்கள் அமைத்தல், இயற்கை
உரம் தயாரிப்பு, குப்பைகளை
பிரித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தண்டையார்
பேட்டை மற்றும் கொளத்தூர்
பகுதியில் பொருளாதாரத்தில் பின்
தங்கிய மக்கள் அதிகம்
உள்ளதால் இங்கு முதற்கட்டமாக வேலைவாய்ப்பு உறுதி
திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில்
சேர்வதற்காக ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 50 முதல் 100 பேர்
வரை விண்ணப்பித்துள்ளார்கள். இந்த
எண்ணிக்கை 500 ஆக உயர்த்தப்படும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் அதிகம்
பலன் அடைவார்கள் என்றும்
அதிகாரிகள் கூறியுள்ளனர். மாநிலம்
முழுவதும் நகர்ப்புற வேலை
வாய்ப்பு உறுதி திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.
85 கோடியை ஒதுக்கியுள்ளது.