கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல்
கால்நடை
பராமரிப்பு உதவியாளர் பணிக்கான
நேர்காணலில் பங்கேற்க, விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறையில்,
காலியாக உள்ள உதவியாளர்
பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கான
நேர்காணல், வரும் ஜன
5 முதல் 8ம் தேதி
வரை, துறையின் மண்டல
இணை இயக்குனர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
காலை
9.30 முதல் மாலை 5.30 மணி
வரை நேர்காணல் நடக்கும்.
விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான தினம், அழைப்பாணை கடிதம்,
அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அழைப்பாணை
பெறாதவர்கள், தக்க ஆதாரங்களுடன் கால்நடை துறை மண்டல
இணை இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் காலை 10.00 முதல்
மாலை 5.45 மணி வரை
வந்து நகலை பெற்றுக்
கொள்ளலாம்.