தமிழகத்தில் 12-ம்
வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரம் – பள்ளிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்
கொரோனா தொற்று பரவி
வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதல்
கட்டமாக பள்ளிகள் மூட
உத்தரவிடப்பட்டது. அதன்
பின்னர் 10 மாதங்களாக பள்ளிகள்
திறக்கப்படாமல் ஆன்லைன்
மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்து
வருவதால் 9, 10, 11, 12-ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்
பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் குறைந்த இடைவெளியில் பள்ளிகள்
திறக்கப்பட்டதால் 9, 10, 11 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்
நடத்தப்படாமல் தேர்ச்சி
வழங்கப்பட உள்ளதாக தமிழக
அரசு உத்தரவிட்டது. தேர்வுகள்
இல்லை என அறிவிக்கப்பட்ட போதிலும் மாணவர்களுக்கு அடிப்படைக்கல்வி தேவை என்பதால் மாணவர்கள்
தொடர்ந்து பள்ளிக்கு வர
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தற்போது
கொரோனா இரண்டாம் அலை
தாக்கம் அதிகமாக பரவி
வருவதால் 9, 10, 11-ஆம்
வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு
வர வேண்டாம் எனவும்
ஆன்லைன் மூலமாக பாடங்கள்
நடத்தப்பட வேண்டும் என
தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 12-ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு தொடர்ந்து
வகுப்புகள் செயல்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை
தீவிரப்படுத்தப்பட வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி
மாணவர்களுக்கு ஒரு
வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்பட வேண்டும்
எனவும், கைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கழுவ வேண்டும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
பள்ளிக்கு வரும் பொது
மாணவர்களின் உடல் வெப்பநிலை
பரிசோதனை செய்யப்பட வேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.