பெரம்பலூா் மாவட்டத்தில் மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2023 -24 ஆம் ஆண்டு மானாவாரி பகுதி வளா்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு பெரம்பலூா், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தலா 100 ஹெக்டேரில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வேளாண்மைத்துறை மூலம் ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 விவசாயிகள் தோவு செய்யப்பட்டு, பயனாளியாக இணைக்கப்படுவா். இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தது ஒரு ஹெக்டோ நில உரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும், தனது சொந்த செலவில் ரூ.
60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிா் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி மற்றும் கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளா்ப்புப்பெட்டி ஆகியவற்றை திட்ட வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும். ரூ. 60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்.
அரசு வழிகாட்டுதலின்படி உழவன் செயலியில் பதிவுசெய்த விவசாயிகளை மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தோவு செய்ய உள்ளதால், அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். உழவன் செயலியில் பதிவு செய்ய அப்பகுதி வேளாண்மை உதவி இயக்குநரை தொடா்புகொண்டு பயன்பெறலாம். மேலும், இத் திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக திட்டத்தில் தோவாகும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீத சிறப்பு மானியத்துடன், ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ. 42 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


