HomeBlogதமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது - TN TRB

தமிழ் வழி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது – TN TRB

TAMIL MIXER EDUCATION.ன்
TN TRB
செய்திகள்

தமிழ் வழி
சான்றிதழ் பதிவேற்றம் செய்ய
அறிவுறுத்தப்பட்டுள்ளதுTN
TRB

தமிழக
அரசு மற்றும் அரசு
உதவி பெறும் மேல்நிலை
பள்ளிகளில் காலியாக உள்ள
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
கடந்த 2021ம் ஆண்டு
வெளியானது. அதனை தொடர்ந்து
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வானது கடந்த
பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

சுமார்
190
தேர்வு மையங்களில் 2.30 லட்சம்
பேர் இத்தேர்வை கணினி
வாயிலாக எழுதினர். இந்த
தேர்வின் முடிவு கடந்த
ஜூலை மாதம் வெளியிடபட்டது. அடுத்த கட்டமாக சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது அதற்கான
பணிகளை தேர்வு வாரியம்
மேற்கொண்டுள்ளது.

அதனால்
தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி
சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது
தேர்வர்கள் 1 முதல் 10ம்
வகுப்பு வரை தமிழ்
வழியில் பயின்ற சான்று,
11,12
ம் வகுப்பு மற்றும்
பட்டப்படிப்பு, கல்வியியல் படிப்பு ஆகியவற்றை தமிழ்
மொழியில் பயின்றதற்கான சான்றிதழை
உரிய அலுவலரின் கையொப்பம்
பெற்று https://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/
என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று
தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும்
விண்ணப்பத்தாரர்கள்சான்றிதழ்களை 26.08.2022 முதல்
30.08.2022
அன்று மாலை 5 மணி
வரை பதிவேற்றம் செய்ய
வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விண்ணப்பத்தில் தமிழ் வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கையில்ஆம்
என்று பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே
சான்றிதழ் பதிவேற்றம் செய்ய
வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட கால
அவகாசத்திற்குள் அனைத்து
ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular