Friday, April 18, 2025
HomeBlogதேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
- Advertisment -

தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

தேர்வு வாரியம்
மூலம் தேர்ச்சி பெற்ற
ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

2013 ல்
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்க தமிழக
அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என தமிழ்நாடு
ஆரம்ப பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாநில பொது
செயலாளர் எஸ்.மயில்
தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

2013 முதல்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்
பணியிடத்திற்கு ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம்
தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 9 ஆண்டாக பணி நியமனம்
இல்லை. 2012ல் ஆசிரியர்
தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற்றோரை மட்டுமே பணி
நியமனம் செய்துள்ளனர். எனவே
இவர்களுக்கு உடனே பணி
வழங்க வேண்டும். ஆசிரியர்
பணி நியமனத்திற்கு பல
கட்ட தேர்வு நடத்தும்
அரசாணை எண் 149
ரத்து செய்ய வேண்டும்.தமிழகத்தில் அரசு தொடக்க நடுநிலை
பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி
ஆசிரியர் காலிபணியிடம் ஆயிரக்கணக்கில் உள்ளன.

அப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
கொரோனா காலத்திற்கு பின்
அரசு பள்ளிகளில் மாணவர்கள்
சேர்க்கை அதிகரித்துள்ளன. அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடமும் அதிகளவில்
நிரப்ப வேண்டிய நிலை
உள்ளது. ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தேர்வான
ஆசிரியர்களுக்கு பணியிடம்
வழங்க கோரி போராடி
வருவோருக்கு தமிழக அரசு
வாழ்வாதாரம் அளிக்க வேண்டும்,
என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
error: Content is protected !!