HomeBlogஇறந்தவர்கள் பெயர் ரேஷன் கார்டுகளில் நீக்கும் பணியை துவக்கம்

இறந்தவர்கள் பெயர் ரேஷன் கார்டுகளில் நீக்கும் பணியை துவக்கம்

இறந்தவர்கள் பெயர்
ரேஷன் கார்டுகளில் நீக்கும்
பணியை துவக்கம்

இறந்து
போன 10.63 லட்சம் பேரின்
பெயர்களை, ரேஷன் கார்டுகளில் நீக்கும் பணியை, உணவு
துறை துவக்கியுள்ளது. ரேஷன்
கார்டில் உள்ள நபர்
இறந்தால், அவரது பெயரை
கார்டில் இருந்து நீக்க
வேண்டும்.

பல
கார்டுகளில் இறந்தவர்கள் பெயர்
நீக்கப்படாமல் உள்ளன.
இதனால், தொடர்ந்து அவர்களுக்கும் சேர்த்து, ரேஷன் பொருட்கள்
அனுப்பப்படுகின்றன.தமிழக
அரசின் மின் ஆளுமை
முகமையிடம் இருந்து, நான்கு
ஆண்டுகளில் இறந்தவர்களின் விபரங்களை,
உணவு வழங்கல் துறை
பெற்றுள்ளது.

அவற்றை
கார்டுதாரர்களின், Aadhar எண்ணுடன்
ஒப்பிட்டு பார்க்கும் போது,
ஏற்கனவே இறந்து போன,
10.63
லட்சம் பேர்களின் பெயர்கள்
நீக்கப்படாமல் இருப்பது
தெரிய வந்தது. அவர்களின்
பெயர்கள் நீக்கும் பணி
துவங்கி
உள்ளது.

இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர், மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், ஒவ்வொரு
மாவட்டத்திலும் நீக்கம்
செய்ய தகுதியுடைய நபர்களின்
பெயர் விபரம் அனுப்பப்பட்டு, அவர்களின் மொபைல் போன்,
ரேஷன் கார்டு எண்
போன்ற விபரங்களை ஆய்வு
செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும்,
இறந்தவர்களின் பெயர்களை
நீக்கம் செய்வது தொடர்பான
பரிந்துரை அறிக்கையை, ஒரு
வாரத்திற்குள் அனுப்ப
வேண்டும் என்றும், மாவட்ட
கலெக்டர்களுக்கு உணவுத்
துறை உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular