நடப்பு கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பொது தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுதவிருக்கும் நபர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாமத கட்டணம் இல்லாமல் 18.10.2023 தேதி வரையிலும், அபராத கட்டணத்துடன் 19.10.2023 முதல் 25.10.2023 ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் நான்கு நாட்களுக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடம் இருந்து தொடர்ந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை கருத்தில் கொண்டு 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களின் விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.