உலக கோப்பை கிரிக்கெட் 2023: இறுதி போட்டியில் இன்று இந்தியா – ஆஸி. பலப்பரீட்சை
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடரின் பரபரப்பான பைனலில், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.
அகமதாபாத் மோடி அரங்கில் இன்று நடைபெறும் பைனலில் 3வது முறையாக கோப்பையை வெல்ல இந்தியாவும், 6வது முறையாக கோப்பையை வெல்ல ஆஸி.யும் மோதுகின்றது.
உலக கோப்பை பைனலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் மோதுகின்றன; 2003 பைனலில் ஆஸி. 125 ரன் வித்தியாசத்தில் வென்றது.
உலக கோப்பை பைனலை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி, ஆஸி. துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லெஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமான பிரபலங்கள் வருவதையொட்டி அகமதாபாத்தில் 6000 போலீசார் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow