ஊக்கத்தொகை பெறும்
கிராமப்புற மாணவிகளின் பெற்றோரது
ஆண்டு வருமான வரம்பு
உயர்வு
கல்வி
ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவியரின் பெற்றோரது ஆண்டு
வருமான வரம்பு அதிகரித்து தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி உதவித்தொகை பெற
மாணாக்கர்களின் பெற்றோரின் ஆண்டு வரும் ரூ.72
ஆயிரமாக இருந்து வந்தது.
இதை ரூ.1 லட்சமாக
உயர்த்தி தமிழக அரசு
அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயனடையும் வகையில், கிராமப்புற மாணவியருக்கு கல்வி
ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரது ஆண்டு
வருமானம் உச்ச வரம்பு
ரூ.72,000 லிருந்து ரூ.1,00,000
ஆக உயர்த்தி தமிழக
அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது,
3 முதல் 6 ம் வகுப்பு
வரை படிக்கும் கிராமப்புற மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற வசதியாக பெற்றோரது
ஆண்டு வருமான வரம்பு
உயர்த்தப்பட்டுள்ளது.