Thursday, August 14, 2025
HomeBlogதமிழகத்தில் Booth Slip இல்லாமல் வாக்களிக்கலாம்

தமிழகத்தில் Booth Slip இல்லாமல் வாக்களிக்கலாம்

 

தமிழகத்தில் Booth Slip இல்லாமல் வாக்களிக்கலாம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (April 6) ஒரே
கட்டமாக நடைபெற உள்ளது.
234
தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண்கள்
3,585
பேர், பெண்கள் 411 பேர்
உள்ளனர். இந்த ஆண்டு
சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம்
முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்களிக்கும் இயந்திரங்கள் அனைத்தும்
தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் குறித்த முக்கிய
அறிவிப்பை தலைமை தேர்தல்
அதிகாரி சத்யபிரதா சாஹூ
இன்று வெளியிட்டார்.

அதில்:

தமிழகம்
முழுவதும் 6.28 கோடி பேர்
வாக்காளர்களாக உள்ளனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபட
4.17
லட்சம் பேர் தயார்
நிலையில் உள்ளனர். வாக்காளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை
செய்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

CORONA தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்
உடல் வெப்பநிலை அதிகமாக
உள்ளவர்கள் மாலை 6 மணிக்கு
மேல் ஓட்டு போட
வேண்டும். தமிழகம் முழுவதும்
50
சதவிகித வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகின்றன.

CORONA நோயாளிகள் மாலை 6 மணிக்கு
மேல் பிபிஇ உடையுடன்
வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் சுமார்
10,813
வாக்குச்சாவடிகள் தமிழகத்தில் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாளை
வாக்குப்பதிவு காலை
7
மணிக்கு தொடங்கப்பட்டு மாலை
7
மணி வரை 12 மணி
நேரம் வரை நடைபெற
உள்ளது. தமிழகத்தில் சுமார்
530
வாக்குச்சாவடிகள் மிகவும்
பதட்டமானவை என கண்டறிந்துள்ளது. வாக்காளர்கள் 1950 என்ற
எண்ணை தொடர்பு கொண்டு
சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் முக்கிய அறிவிப்பாக Booth Slip இல்லை
என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments