HomeBlogஆசிரியர் பணிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - TRB

ஆசிரியர் பணிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு – TRB

TAMIL MIXER EDUCATION.ன்
TRB
செய்திகள்

ஆசிரியர் பணிக்கு
புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
– TRB

முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்று
கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆசிரியர் தேர்வு
வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

2020-2021ம்
ஆண்டு முதுநிலை பட்டதாரி
ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர்
நிலை ஒன்று, கணினி
பயிற்றுனர் நிலை ஒன்று
ஆகிய நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டன.

இந்த
பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஆன்லைன் வழி
எழுத்து தேர்வு பிப்ரவரி
12
ம் தேதி முதல்
20
ம் தேதி வரை
கம்ப்யூட்டர் மூலம்
நடத்தப்பட்டது. இந்த
எழுத்துத் தேர்வின் முடிவுகள்
ஜூலை 4ம் தேதி
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.

மேலும்
இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தமிழ் வழி
சான்று பதிவேற்றம் செய்யவும்
ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆகஸ்ட் 26ம் தேதி
முதல் 30ம் தேதி
வரை பதிவேற்றம் செய்ய
அறிவுறுத்தி உள்ளது. மேலும்
17
பாடங்களுக்கு ஒரு
பணியிடத்திற்கு 2 பேர்
வீதம் சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2-ம் தேதி முதல்
4-
ம் தேதி வரையில்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தில் நடைபெறுகிறது. சான்றிதழ்
சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணி நாடுநர்களுக்கு அழைப்புக்
கடிதம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அதில்
இருந்து பதிவிறக்கம் செய்துக்
கொள்ளலாம். அழைப்பு கடிதம்
பிற வழிகளில் அனுப்பி
வைக்கப்படமாட்டாது. பணிநாடுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னர்
மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை
புரியாத விண்ணப்பதார்கள் அவர்கள்
தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தக்கட்ட பணித்
தேர்விற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் ஒரு பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே
இறுதித் தேர்வுக்கு உத்தரவாதம் இல்லை. ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் வளாகத்தின் வாசலில்
கூட்டமாக சேர்வதை தவிர்த்து
வளாகத்திற்குள் அமைதி
காத்திட வேண்டும்.

சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு வரும்
பணிநாடுநர்கள் அசல்
கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள், அசல்
ஆதார் அட்டை, இந்த
சான்றிதழ்களின ஒரு
செட் சுய சான்றொப்பம் இட்ட நகல், அழைப்புக்கடிதம், மற்றும் விண்ணப்ப நகல்
ஆகியவற்றை தவறாமல் கொண்டு
வர வேண்டும்.

செல்போன்,
பைகள் உள்ளிட்டப் பொருள்கள்
கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. வளாகத்திற்குள் பெற்றோர்கள், சிறார்கள் மற்றும்
உறவினர்களை அழைத்து வரக்கூடாது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular