HomeBlogமாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய
அறிவிப்புமத்திய அரசு

ஊனமுற்றோருக்கு அரசு சான்றிதழ் வழங்குவது
வழக்கம். மத்திய மற்றும்
மாநில அரசுகள் மாற்றுத்திறனாளர் என்ற சான்றிதழை
வழங்குவர். மாற்றுத் திறனாளிகள் இதற்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து சான்றிதழை
பெற்றுக் கொள்வர். இந்த
சான்றிதழ் மத்திய, மற்றும்
மாநில அரசுகள் வழங்கும்
பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள்,
உதவித்தொகை போன்றவற்றை பெற
அவசியமாகும்.

தற்போது
கொரோனா இரண்டாம் அலை
வேகமெடுத்து பரவி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள்
நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.
ஆனாலும் நோய் பரவல்
அதிகரித்து கொண்டே செல்கிறது
இத்தகைய சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் ஊனமுற்றோர் சான்றிதழ்களை ஆன்லைனில்
வழங்குவதை மத்திய அரசு
கட்டாயமாக்கியுள்ளது. மாற்றுத்திறனாளர்கள் சம்பந்தப்பட்ட அரசு
அலுவலகங்களை அணுகி மாற்றுத்
திறனாளர் சான்றிதழ்களை பெற
முடியாத நிலையில் உள்ளனர்.  

அவர்களால்
கொரோனா பரவல் மத்தியில்
வெளியில் சென்று இந்த
சான்றிதழ்களை வாங்க
இயலாது எனவே அவர்களின்
நலன் கருதி அரசு
ஆன்லைன் மூலம் பெற
ஏற்பாடு செய்துள்ளது. யு.டி..டி.,
எனும் இணையதளத்தை பயன்படுத்தி மட்டுமே, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஊனமுற்றோர் சான்றிதழை ஆன்லைன் முறையில்
வழங்க வேண்டும் என
மத்திய அரசின் சமூக
நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும்
இத்தகைய திட்டமானது வரும்
ஜூன் 1ம் தேதி
முதல் அமல்படுத்தப்பட உள்ளது
என அரசு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular