HomeBlogமத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

 

மத்திய அரசு
ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய
அறிவிப்பு

மத்திய
அரசு ஓய்வூதியதாரர்களில் 2004-ஆம்
ஆண்டு ஜனவரி 1 ஆம்
தேதிக்கு முன்னதாக பணி
நியமனம் வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி ஊதியம் வழங்க
அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த
அறிவிப்பு 2004-ஆம் ஆண்டிற்கு
முன்னதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால் அரசு ஊழியர்கள்
சம்பந்தப்பட்ட பணிக்கு
தேர்வு செய்யப்பட்ட பின்னர்
காவல் துறை சரிபார்ப்பு போன்ற காரணங்களால் காலதாமதம்
ஏற்பட்டால் அவர்களுக்கும் இந்த
திட்டம் செல்லுபடியாகும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே
இந்த திட்டம் மூலமாக
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர். மேலும்
புதிய ஓய்வூதிய திட்டத்தை
விட பழைய ஓய்வூதிய
திட்டத்தில் பல சலுகைகள்
வழங்கப்படுகின்றன. பழைய
ஓய்வூதிய முறையில் சம்பந்தப்பட்ட ஊழியர் மற்றும் அவரது
குடும்பத்தினர் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.
ஆனால் புதிய ஓய்வூதிய
திட்டம் அவ்வாறாக இல்லை.

மேலும்
இந்த திட்டத்தின் மூலமாக
2004-
ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 1 ஆம் தேதிக்கு
பின்னர் பணி நியமனம்
வழங்கப்பட்டவர்களுக்கு புதிய
ஓய்வூதிய திட்டம் அல்லது
பழைய ஓய்வூதிய திட்டம்
என இரண்டில் ஏதாவது
ஒரு வகையை தேர்வு
செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் புதிய ஓய்வூதிய
திட்டத்தை தேர்வு செய்பவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

ஏனெனில்
அந்த முறை தான்
தற்போது நடைமுறையில் உள்ளது.
ஓய்வூதிய முறை மாற்றி
அமைக்க விருப்பமுள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பென்சன் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என
மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular