தமிழகம் முழுவதும்
ஆசிரியர்களுக்கு முக்கிய
அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு
(2022-2023) முதல் 2025ம் வருடத்துக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து
மாணவா்களும் புரிந்துணா்வுடன் படிக்கவும், அடிப்படை கணித திறன்களை
கொண்டிருப்பதை உறுதி
செய்யவும், “எண்ணும் எழுத்தும்”
எனும் திட்டத்தை கல்வித்துறை கொண்டுவந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்திலுள்ள அரசு
மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் 1-5 ஆம்
வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு “எண்ணும்
எழுத்தும்” என்ற தலைப்பின்
கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது
தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்
கல்வி இயக்ககம் சார்பாக
அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது .
அதில்,
இப்பயிற்சிக்காக 12 கட்டகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவை
அனைத்தும் TNEMIS வாயிலாக அனுப்பி
வைக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் தங்களது பயனாளா்
குறியீடு, கடவுச்சொல் போன்றவற்றை பயன்படுத்தி இணையதளம் மூலம்
இந்தப் பயிற்சியை அவசியம்
பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த கட்டகங்கள் அனைத்திலும் காணொலிகள், செயல்பாடுகள் மற்றும்
மதிப்பீடு போன்றவை அடங்கியுள்ளன. ஆகவே ஒவ்வொரு கட்டகத்தின் இறுதியில் ஆசிரியா்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவா்.
அதன்பின்
நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் அவா்களுக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிட்டால் மீண்டும்
அதில் பயிற்சி பெறுதல்
வேண்டும். இப்பயிற்சிக்கான அட்டவணை
தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்
பயிற்சியானது பிப்.9
(இன்று) தொடங்கி மார்ச்
25ஆம் தேதி வரை
நடைபெற இருக்கிறது. இதனைதொடர்ந்து மார்ச் 28 முதல் ஏப்.9
வரையிலான நாள்களில் விடுபட்டோருக்கான பயிற்சி வகுப்பு
நடைபெறும். அனைத்து கட்டகங்களையும் முடித்ததற்கான சான்றிதழ்
பெற்ற பின் பயிற்சிக்கான செலவினம் அவரவா் வங்கிக்
கணக்கில் “இசிஎஸ்” பரிவா்த்தனை மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலா்களால் வழங்கப்பட
வேண்டும் என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.