Join Whatsapp Group

Join Telegram Group

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12ஆம் வகுப்பிற்கு ஒத்திவைப்பு

By admin

Updated on:

ஐசிஎஸ்இ 10ஆம்
வகுப்பு தேர்வு ரத்து:
12
ஆம் வகுப்பிற்கு ஒத்திவைப்பு

ஐசிஎஸ்இ
பாடத்திட்டத்தின் 10ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
செய்யப்பட்டும், 12ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைத்தும் அறிவித்துள்ளனர்.

நாடு
முழுவதும் கரோனா இரண்டாம்
அலை தீவிரமாக பரவி
வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல
மாநிலங்களில் இரவுநேர
பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து சிபிஎஸ்இ தொடர்ந்து, ஐசிஎஸ்இ
பாடத்திட்டத்தின் 10ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு  ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில்:

நாடு
முழுவதும் கரோனா பரவி
வருவதால் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 12ஆம் வகுப்பு
தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

10ஆம்
வகுப்பிற்கு இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று
தேர்வு எழுதாமல், உள்மதிப்பீட்டின் மூலம் மதிப்பெண்
பெற்றுக் கொள்வது அல்லது
பின்னர் அறிவிக்கப்படும் தேதியில்
தேர்வு எழுதுவது.

மேலும்,
தேர்வுக்கான புதிய தேதி
குறித்த இறுதி முடிவு
ஜூன் முதலாவது வாரத்தில்
அறிவிக்கப்படும் எனத்
தெரிவித்துள்ளனர்.

Notification: Click
Here

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]