பட்டியலின மாணவர்களுக்குத் IAS., IPS., பயிற்சி
இந்திரா
காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (Indira Gandhi
National Open University- IGNOU) டாக்டர் அம்பேத்கர் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ்
சார்பில் குடிமைப் பணி
தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் பட்டியலினத்தைச் சேர்ந்த
மாணவர்களுக்கு இலவச
பயிற்சி அளிக்கும் திட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் உயர்கல்வி
வாய்ப்புகளைக் கொண்டு
சேர்ப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு 1985இல் இந்திய
அரசால் இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தொலைதூர,
திறந்தநிலைக் கல்விக்கான இந்திய அளவிலான கேந்திரமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. தொலைதூரக் கல்வியின் தரத்தை
மேம்படுத்துவதிலும் முதன்மைப்
பங்காற்றிவருகிறது. புது
டெல்லியில் அமைந்துள்ள இந்தப்
பல்கலைக்கழகத்தில் பட்டியலின
மாணவர்களுக்குக் கல்வியில்
உயர்தர பயிற்சி வழங்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் சென்டர்
ஆஃப் எக்சலன்ஸ் என்னும்
அமைப்பை மத்திய அரசின்
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியது.
2023ல்
நடத்தப்படவிருக்கும் குடிமைப்
பணித் தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு, (Prelims), முதன்மைத்
தேர்வு (Main) ஆகிய இரண்டு
தேர்வுகளையும் எதிர்கொள்ள பட்டியலின மாணவர்கள் 100 பேருக்குப் பயிற்சிவழங்கும் திட்டம்
டாக்டர் அம்பேத்கர் சென்டர்
ஃபார் எக்சலன்ஸின் சார்பில்
தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப்
பயிற்சிக்குத் தேர்வுபெறுவதற்காக அனைத்திந்திய அளவில்
நுழைவுத் தேர்வு நடத்தப்பட
இருக்கிறது. இந்தத் தேர்வில்
முதல் 100 இடங்களைப் பெறுவோருக்குக் குடிமைப் பணித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
பெண்களுக்கு 33 சதவீதம் இட
ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. எனவே,
தேர்வாகும் 100 மாணவர்களில் 33 பேர்
பட்டியல் இனத்தைச் சேர்ந்த
பெண்களாக இருப்பார்கள்.
இந்த
நுழைவுத் தேர்வில் பங்கேற்க
விண்ணப்பிப்பதற்கான அவகாசம்
ஜூன் 5 தொடங்கியது. 2022 ஜூன்
30 வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத்
தேர்வு, பயிற்சி ஆகியவை
குறித்த கூடுதல் தகவல்களையும் விண்ணப்பப் படிவத்தையும் கீழ்க்கண்ட இணையப் பக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
SITE: CLICK HERE