Home Blog கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?

கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?

0

How to choose colleges?

TAMIL MIXER EDUCATION.ன்
கல்லூரி
செய்திகள்

கல்லூரிகளை தேர்வு
செய்வது எப்படி?

தமிழ்நாடு Engineering Counseling Committee செயலர் பேராசிரியர் புருஷோத்தமன் பேசியதாவது:

Counseling.க்கு விண்ணப்பித்தவர்கள், தினமும்
Engineering Counseling இணையதளத்தை பார்த்து, புதிய தகவல்களை
அறிந்து கொள்ளுங்கள்.

சந்தேகங்கள் ஏற்பட்டால், உதவி மையங்களில் விளக்கம் பெறலாம்.தங்களுக்கான தர வரிசையைப் பார்த்து,
கல்லுாரிகள் மற்றும் பாடப்
பிரிவுகளை தேர்வு செய்ய
வேண்டும். ENGINEERING
COUNSELING
இணையதளத்தில் இடம்
பெற்றுள்ள, ஐந்து ஆண்டு
கட் ஆப் மதிப்பெண்களை பார்த்து, கல்லுாரிகள் குறித்து
முன்பே பட்டியல் போட்டு
கொள்ளுங்கள்.

ஆன்லைன்
சாய்ஸ் பில்லிங் பதிவுக்கு,
மூன்று நாட்கள் அவகாசம்
தரப்படும். தங்களின் விருப்ப
பாடம் மற்றும் கல்லுாரிகளை, முன்னுரிமை வரிசைப்படி பதிவிட
வேண்டும். விருப்பப் பதிவுக்கு
ஏற்ப, கணினியே இடங்களை
ஒதுக்கும்; எனவே பதிவு
செய்யும்போது, முன்னுரிமை வரிசையில் கவனம் தேவை.நான்கு
சுற்றுகளாக இட ஒதுக்கீடு
நடக்கும்.

கல்லுாரி
ஒதுக்கியதும், ஒரு
வாரத்துக்குள் சான்றிதழ்களை கல்லுாரியில் அளித்து,
கட்டணம் செலுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த
இடங்கள் காலியானதாக கருதப்பட்டு, அடுத்த சுற்றில் உள்ளவருக்கு ஒதுக்கப்படும்.அரசு
பள்ளிகளில் படித்தவர்களுக்கு, 7.5% இட
ஒதுக்கீட்டில், அனைத்து
வகை கட்டணங்களையும், அரசே
ஏற்கிறது. முதல் தலைமுறை
பட்டதாரி மாணவர்கள் மற்றும்
அரசின், 7.5% ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கட்டண சலுகை உள்ளது.கட்டண
சலுகை இருந்தாலும், அவர்களும்
தங்களுக்கு இடம் கிடைத்ததும், ஒரு வாரத்துக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டியது கட்டாயம்.

CBSE., மாணவர்களுக்கு தேர்வு
முடிவு வரும் வரை,
COUNSELING நடத்தப்படாது என, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் ஏற்கனவே
அறிவித்துள்ளார்.

எனவே,
CBSE., மாணவர்கள் தேர்வு
முடிவு வந்ததும், விரைந்து
பதிவு செய்ய வேண்டும்.

Chennai Institute of
Technology
கல்லுாரி தலைவர் ஸ்ரீராம் பேசியதாவது:

ENGINEERING துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.பல
தொழில் நிறுவனங்கள், கல்லுாரிகளுடன் இணைந்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளித்து, மாணவர்களுக்கு தேவையான
தனித் திறமைகளை வளர்த்து
வருகின்றன.

ENGINEERING மாணவர்களுக்கு, பெரும்பாலும் டிஜிட்டல் தொழில்நுட்ப பணிகள்
அதிகமாக உள்ளன. அதற்கு
ஏற்ப மாணவர்கள் தாங்கள்
படிக்கும்போதே, வேலைவாய்ப்புக்கு ஏற்ற கூடுதல்
படிப்புகளை மேற்கொண்டு, தனித்
திறன்களை வளர்த்து கொள்ள
வேண்டும்.

அதனால்,
நான்கு ஆண்டுகள் படித்து
முடிக்கும்போது, வேலையை
பெறுவதில், எந்த பிரச்னையும் இருக்காது.

கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:

இன்ஜினியரிங்கில் எந்த பாடப்பிரிவையும் தேர்வு செய்யலாம். அதனுடன்,
கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற
டிஜிட்டல் தொழில்நுட்ப திறன்களை
வளர்த்தால், கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பாடப்பிரிவை போலவே, சிறந்த கல்லுாரிகளையும் தேர்வு செய்ய வேண்டும்.கல்லுாரிகளை பொறுத்தவரை தேசிய அளவிலான
அங்கீகாரம், கூடுதல் பயிற்சி
முறைகள், உள் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவற்றை பார்த்து
தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து
வகை நிறுவனங்களின் செயல்பாடுகள், டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளதால், கணினி படிப்புடன் தற்போது
பிசினஸ் கம்ப்யூட்டிங் பாடப்பிரிவுகளும் அதிகரித்துள்ளன.

அவற்றையும் தேர்வு செய்யலாம். கணினி
அறிவியல் மட்டுமின்றி, மற்ற
எலக்ட்ரிக்கல், சிவில்,
மெக்கானிக்கல், கெமிக்கல்
தொழில் நுட்பம் போன்ற,
முக்கிய பாடப்பிரிவுகளுக்கும், வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மேலும்,
சூழ்நிலைக்கு ஏற்ப
சமயோஜிதமாக செயல்படும் திறன்களை
வளர்த்து கொள்வது முக்கியம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version