HomeBlogமுதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி???

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி???

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி???

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிப்பது எவ்வாறு
என்பதை காண்போம்.

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய
மக்களுக்கு நவீன மற்றும்
மேம்படுத்தப்பட்ட மருத்துவ
வசதிகளை வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீடு திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு உதவிகள் கிடைக்கிறது. கடைசியாக
2020
ஜூன் முதல் கொரோனா
சிகிச்சைக்கான செலவும்
இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு தனியார்
மருத்துவமனைகளுக்கும் கட்டண
விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

ஒரு
குடும்பத்துக்கு ஆண்டு
ஒன்றுக்கு 5 லட்சம் வரை
காப்பீடு கிடைக்கிறது. இத்திட்டத்தில் பதிவு செய்வது எப்படி
என்பது நிறைய பேருக்கு
தெரிவதில்லை. பதிவு செய்தவர்களுக்கான அடையாள அட்டை
வழங்கப்படுகிறது. அதன்
மூலம் அவர்கள் உதவிகளைப்
பெறலாம். இத்திட்டத்தின் கீழ்
பதிவு செய்ய குடும்ப
அட்டை கட்டாயம் தேவை.
மேலும் ஆண்டு வருமானம்
ரூபாய் 72,000க்கும் குறைவாக
இருக்க வேண்டும். கிராம
நிர்வாக அலுவலர்களிடம் இருந்து
வருமான சான்று பெற்று
வரவேண்டும்.

மாவட்ட
ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மருத்துவ அடையாள அட்டை,
குடும்ப அட்டை, மற்றும்
வருமான சான்றிதழ் வழங்க
வேண்டும்.

இதையடுத்து அங்கேயே பதிவு செய்து
முதலமைச்சரின் விரிவான
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்த அடையாள
அட்டையில் குடும்ப தலைவர்
மற்றும் உறுப்பினர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். மேலும்
இரண்டு வயதுக்கு மேற்பட்ட
நபர்கள் கைரேகை பதிவு
இருக்கும்

இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்னும்
கட்டணமில்லா தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular