Sunday, August 31, 2025
HomeBlog2 பெண் குழந்தைகள் வீட்டில் அரசின் உதவித்தொகையை பெறுவது எப்படி?

2 பெண் குழந்தைகள் வீட்டில் அரசின் உதவித்தொகையை பெறுவது எப்படி?

2 பெண் குழந்தைகள் வீட்டில்
அரசின்
உதவித்தொகையை பெறுவது எப்படி?

தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக தமிழக அரசு பல்வேறு
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் முக்கியமாக, குடும்பக்
கட்டுப்பாட்டு முறையை
ஊக்குவிப்பது, பெண்
குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, திருமண உதவித்
தொகை தாலிக்கு தங்கம்
மற்றும் திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு
தமிழக முதல்வர் பெண்கள்
பாதுகாப்புத் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக
நலன் மற்றும் மகளிர்
உரிமைத்துறையின் கீழ்
முதலமைச்சரின் இரண்டு
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். ஆண்டு வருமானம்
72,000
ரூபாய்க்குக் குறைவாக
இந்த திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை
இருந்தால், ரூ.50,000 மற்றும்
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25,000 வழங்கப்படும்.

மேலும்
18
வயது முதிர்வடைந்த பிறகு
முதிர்வுத்தொகை மற்றும்
வட்டியுடன் சேர்த்துப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு தொகை செலுத்திய
காலத்திலிருந்து 5 வயது
வரை மாதம் ஒன்றுக்கு
ரூ.150 என்ற அளவில்
கிடைக்கும். 18 வயது வரை
இந்த உதவி உங்களுக்கு வரும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஊராட்சி,
நகராட்சி அலுவலகங்கள் மற்றும்
மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள
சமூக நலப் பிரிவு
அலுவலர், மகளிர் நல
அலுவலர்களிடம் அசல்
வைப்புநிதிப் பத்திரம்,
பயனாளியின் புகைப்படம், 10-ம்
வகுப்பு சான்றிதழ், பயனாளியின் பெயரில் தனி வங்கிக்
கணக்குப் புத்தக நகல்
ஆகிய சான்றுகளுடன் சமர்ப்பித்துப் பயன்பெறலாம். குறிப்பாக ஆண்
குழந்தைகள் இருந்தால் இந்த
திட்டத்தில் பயன் பெற
முடியாது. தாயாரின் கருத்தடை
செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்)
ஆண் வாரிசு இல்லை
என்பதற்கான சான்று பெற்று
சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

திருமணத்திற்கு பின்:

தாலிக்கு
தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம்
தங்கமும், ரூபாய் 50,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல
பட்டப்படிப்புக்கு கீழ்
கல்வித் தகுதி பெற்ற
பெண்களுக்கு 8 கிராம் தங்கமும்
மற்றும் 25,000 ரூபாய் உதவித்
தொகையும் வழங்கப்படுகிறது.. திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே பெற்றோர்
இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பே பெற்றோர்,
இருப்பிடச் சான்று, வருமானச்
சான்று, திருமண பத்திரிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் திருமணம் முடிந்ததும் பதிவு சான்றிதழுடன் விண்ணப்பித்தால் இந்தத் திட்டத்தின் கீழ்
பயன் அடையலாம். திருமண
மண்டபங்களில் நடந்த
திருமணங்களுக்கு நிதியுதவி
தொகை பெற முடியாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments