HomeBlogஅனைவருக்கும் வீடு திட்டம் - பயன் பெற விண்ணப்பிக்கலாம்

அனைவருக்கும் வீடு திட்டம் – பயன் பெற விண்ணப்பிக்கலாம்

அனைவருக்கும் வீடு
திட்டம்
பயன்
பெற விண்ணப்பிக்கலாம்

அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன்பெற
விரும்புவோர் பழநி
நகராட்சியில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பழநி தாதநாயக்கன்பட்டியில் புதிதாக
264
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட
உள்ளது. இக்குடியிருப்புகளுக்கு அரசுக்கு
சொந்தமான நீர் நிலைகள்,
இதர புறம்போக்கு நிலத்தில்
வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள், வீடற்ற
பொருளாதாரத்தில் நலிவடைந்த
பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு
செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பயன்பெற
விரும்புவோர் தனது
பெயரிலோ, குடும்ப உறுப்பினர் பெயரிலோ வீடோ அல்லது
வீட்டு மனையோ இருக்க
கூடாது.

மாத
வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். பயனாளிகளுக்கான உத்தேச பங்குத்தொகை ரூ.2.70
லட்சம் செலுத்த சம்மதம்
தெரிவிக்க வேண்டும்.குடும்ப
தலைவர், தலைவியின் ஆதார்
நகர், பயனாளியின் வங்கி
பாஸ்புக் புத்தகம் ஆகியவற்றை
பழநி நகராட்சி அலுவலகத்தில் மார்ச் 9, 10 ல் நடக்கும்
சிறப்பு முகாமில் கொடுத்து
பயனடையலாம் என திண்டுக்கல் கலெக்டர் விசாகன்
தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular